உலகம்

பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்காக இந்தியா வருகிறார் ரஷிய அதிபர் புதின்..!

செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் புது தில்லிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

2026-ம் ஆண்டுக்கான பிரிக்ஸ் அமைப்பிற்கான தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு, மூலோபாய ஒத்துழைப்பு மற்றும் பொருளாதார வர்த்தகம் ஆகியவை இந்த மாநாட்டின் முக்கிய அம்சமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் செப்டம்பர் மாதம் 12 மற்றும் 13 தேதிகளில் நடைபெறவிருக்கும் இந்த உச்சிமாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நேரில் கலந்துகொள்வார் என ரஷிய அதிபர் மாளிகை உறுதியளித்துள்ளது.

இது, ஓராண்டிற்குள் புதின் மேற்கொள்ளும் இரண்டாவது இந்தியப் பயணமாகும். மேலும், இது இரு நாடுகளுக்கும் இடையேயான தொடர்ச்சியான உயர்மட்ட ஈடுபாட்டை குறிக்கிறது.

டெல்லியில் கடந்த மே 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடைபெற்ற பிரிக்ஸ் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்தில் இந்தியா வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தலைமை தாங்கினார். அதற்காக ரஷியா வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் வருகை தந்தார்.

இந்நிகழ்வையொட்டி ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் இந்தியா வருகை உறுதிசெய்யப்பட்டுள்ளது.