இப்படியெல்லாம் கூட கின்னஸ் சாதனை படைக்க முடியுமா என பிரேசில் நாட்டை சேர்ந்த ஒரு ஜோடி வியக்க வைத்துள்ளது. ஆம் அந்த ஜோடி வெறும் 30 வினாடிகளில் 195 முறை முத்தம் கொடுத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.
பிரேசிலின் சாவோ பாலோ நகரைச் சேர்ந்த தம்பதியினர் ரெனாடோ மற்றும் நையாரா. இந்தத் தம்பதியினர் இருவரும் மருத்துவத்துறையில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இருவரும் வெறும் 30 வினாடிகளில் (அரை நிமிடம்) 195 முறை ஒருவருக்கொருவர் முத்தமிட்டு உலகை வியப்பில் ஆழ்த்தி உள்ளனர்.
இவர்களில் ரெனாடோவுக்கு 'ஏடிஎச்டி' எனப்படும் கவனக்குறைவு மற்றும் மிகையான செயல்பாட்டுக் குறைபாடு பாதிப்பு உள்ளது. இருப்பினும், முறையான பயிற்சியும் தீவிர மன உறுதியும் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை நிரூபிக்கவே இந்த முயற்சியை மேற்கொண்டதாக தம்பதியினர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
இந்த சாதனையை நிகழ்த்தும்போது அவர்கள் இருவரின் ஒருங்கிணைப்பும் வேகமும் பார்ப்பதற்கு அருமையாக இருந்தது, அதன் காரணமாகவே அவர்களால் இந்தச் சாதனையை அடைய முடிந்தது. சாதனை படைக்கப்பட்ட பிறகு, ரெனாட்டோ தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும், இந்தச் சாதனை தங்களது உறவின் வலுவான புரிதலையும் சிறந்த ஒருங்கிணைப்பையும் காட்டுகிறது என கூறியுள்ளனர். இதனால்தான் அவர்கள் தங்களை உலகின் சிறந்த தம்பதிகளில் ஒருவராக கருதுகிறார்கள்.
இந்த முயற்சி, தற்போது அதிகாரப்பூர்வ கின்னஸ் சாதனையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இணையத்தில் இவர்களின் சாதனை வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் பல்வேறு விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.