உலகம்

போரில் மிகப்பெரிய வெற்றி..!- டிரம்ப்

ஈரானின் ராணுவம் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியதாவது:-

நான் ஒரு போரில் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்று வருகிறேன். ஆனால் சிலர் போலியான செய்திகளை வெளியிடுகிறார்கள். ஈரானின் ராணுவம் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டது.

ஒரு ஒப்பந்தம் ஏற்படும் வரை நாம் விலக்கிக்கொள்ளாத ஹார்முஸ் ஜலசந்தி முற்றுகையால் ஈரான் முற்றிலுமாக அழிந்துக் கொண்டிருக்கிறது. அவர்கள் ஒரு நாளைக்கு 500 மில்லியன் டாலர்களை இழக்கிறார்கள்.

ஈரானுடன் நாங்கள் மேற்கொள்ளவிருக்கும் ஒப்பந்தம், முந்தைய அதிபர்கள் செய்த ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தைவிட பலமடங்கு சிறந்ததாக இருக்கும்.

ஈரானின் தலைமை தங்கள் எண்ணெய்யை அமெரிக்கா பெற்றுக்கொள்வதற்காக நூற்றுக்கணக்கான கப்பல்களை அமெரிக்காவின் டெக்சாஸ், லூசியானா, அலாஸ்கா மாகாணங்களை நோக்கி செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளது.