உலகம்

சமையலறையில் புகுந்து தீ வைத்த கரடி - குடும்பத்தை காப்பாற்ற கரடியை கருணை கொலை செய்த அதிகாரிகள்

வீட்டுக்குள் புகுந்து சமையலறையில் தீ விபத்து ஏற்படுத்திய ஆக்ரோஷமான கரடியை தீயணைப்பு துறை அதிகாரிகள் சுட்டுக்கொன்றனர்.

அமெரிக்காவின் கொலராடோ பகுதியில் குடும்பத்தினர் தங்களது வீட்டில் இருந்தபோது, அந்த வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வந்த கரடி ஒன்று வீட்டை சூறையாடி சமையலறையில் தீ விபத்து ஏற்படுத்தியதை அடுத்து, அங்கு வந்த தீயணைப்புத் துறை வீரர்கள் கரடியை விரட்டி தீயை அணைத்தனர்.

அமெரிக்காவின் மவுண்ட் கிரெஸ்டட் பட் குடியிருப்பு பகுதியில் உள்ள இல்லத்தில் ஒரு குடும்பம் வசித்து வந்துள்ளது. இதையடுத்து கடந்த வாரம் ஆகஸ்ட் 19 ஆம் தேதி இரவு, வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு கரடி ஒன்று உள்ளே நுழைய முயன்றுள்ளது.

இதையடுத்து வீட்டின் நுழைவாயிலில் இருந்த கண்ணாடி ஜன்னலை உடைத்துக் கொண்டு, அந்த கரடி விட்டின் உள்ளெ புகுந்துள்ளது.

பின்னர் வீட்டின் உள்ளே நுழைந்த கரடி, நுழைவாயில் மற்றும் வரவேற்பறையில் இருந்த அலமாரிகள் மற்றும் ஜன்னல் திரைகளை கீறி சேதப்படுத்தியுள்ளது.

இதைத்தொடர்ந்து அந்த கரடி, குளிர்சாதனப் பெட்டியை சிதைத்துவிட்டு, சமையலறையில் இருந்த பாத்திரங்களையும், மர அலமாறிகளையும் உடைத்துள்ளது.

பின்னர் சமையலறைக்கும் நுழைந்த அந்த கரடி, அங்கிருந்த மின்சார அடுப்பை தட்டி விட்டதில், அந்த அடுப்பு தீப்பிடித்து எரிந்து, வீடு முழுவதும் புகை சூழ்ந்தது.

இந்த சம்பவம் குறித்து வீட்டில் இருந்த குடும்பத்தினர் 911 என்ற எண்ணை தொடர்பு கொண்டு, கிரெஸ்டட் பட் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறை அதிகாரிகள், கரடி ஒன்று வரவேற்பறை ஜன்னலை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைய முயற்சிப்பதை கண்டனர்.

கரடியின் ஆக்ரோஷமான நடத்தையான கண்ட அதிகாரிகள், அதை விரட்டி தீயை அணைக்க முயற்சி செய்தனர்.

ஆனால் கரடி அங்கிருந்து செல்லாமல் ஆக்ரோஷமாக நின்று கொண்டிருந்ததால், எரிந்து கொண்டிருந்த வீட்டின் உள்ளெ இருந்த குடும்பத்தை காப்பாற்ற, தீயணைப்புத் துறையினர் வேறு வழியில்லாமல் கரடியை துப்பாக்கியால் சுட்டனர்.

இதையடுத்து குணடடிபட்டு கரடி கீழே விழுந்து உயிரிழந்ததை அடுத்து, தீயை அணைத்து வீட்டின் உள்ளே சிக்கி கொண்டிருந்த குடும்பத்தை அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர்.