பக்ரீத் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் வங்கதேசத்தை சேர்ந்த இரண்டு எருமை மாடுகள் கவனம் ஈர்த்து வருகின்றன.
ஒன்றின் பெயர் டொனால்டு டிரம்ப், மற்றொன்றின் பெயர் பெஞ்சமின் நேதன்யாகு.
தலைநகர் டாக்காவில் உள்ள ஒரு பண்ணையில் வளர்க்கப்பட்ட 700 கிலோ எடை கொண்ட அல்பினோ வகை எருமை மாடு வெளிர் நிறத் தோலும், அமெரிக்க அதிபர் டிரம்ப் வைத்துள்ளது போன்ற ஹேர்ஸ்டைலையும் கொண்டுள்ளது. எனவே உள்ளதாக மக்கள் அதற்கு 'டொனால்ட் டிரம்ப்' என பெயர் சூட்டியுள்ளனர்.
உருவத்தில் டிரம்ப்பை ஒத்திருந்தாலும், குணத்தில் இந்த எருமை மிகவும் அமைதியானது மற்றும் சாதுவானது என்று பண்ணை உரிமையாளர் ஜியாவுதீன் மிருதா தெரிவித்தார்.
நாராயணகஞ்ச் பகுதியில் உள்ள ஒரு பண்ணையில் வளர்க்கப்படும் மற்றொரு எருமைக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
750 கிலோவிற்கும் அதிக எடை கொண்ட இந்த எருமை, டிரம்ப் எருமையைப் போலல்லாமல் மிகுந்த ஆக்ரோஷமான குணம் கொண்டதாக உள்ளது.
இது மிகவும் குறும்புக்கார எருமை என்றும், இதற்கு ஒருவித தந்திரமான புத்திசாலித்தனம் இருப்பதாகவும் பண்ணை மேலாளர் தெரிவித்துள்ளார்.
பண்டிகைக் காலம் நெருங்குவதால், இந்த இரு எருமைகளையும் நேரில் காணவும், அவற்றுடன் செல்பி எடுக்கவும் பலர் பண்ணைகளில் அதிகளவில் குவிந்து வருகின்றனர்.