உலகம்

பலுசிஸ்தான் கடற்படை தாக்குதல்: பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 13 பேர் பலி

பாகிஸ்தான் கடற்படையின் ரோந்துப்படகை குறிவைத்து தனது முதல் கடற்படை நடவடிக்கையை தொடங்கியிருந்தது.

பலுசிஸ்தானின் குவாதர் மாவட்டத்தில் உள்ள ஜிவானி என்ற இடத்தில் 2 படகுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 13 பாகிஸ்தான் கடலோரக் காவல்படை வீரர்கள் கொல்லப்பட்டதாக பலுச் விடுதலை ராணுவம் கூறியுள்ளது.

இந்த நடவடிக்கையை தங்களின் கடற்படை பிரிவான ஹம்மல் கடல்சார் பாதுகாப்பு படை மேற்கொண்டதாக அந்த அமைப்பு தெரிவித்து உள்ளது.

அதே நேரம் பாதுகாப்புப் படையினரும் ஆக்ரோஷமாகப் பதிலடி கொடுத்ததால், கிளர்ச்சியாளர்கள் தப்பி ஓடிவிட்டனர் என்றும், இதில் சில வீரர்கள் மட்டுமே காயம் அடைந்தனர், யாரும் உயிரிழக்கவில்லை என்றும் பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, ஜிவானி பகுதிகள் பலப்படுத்தப்பட்டு, அப்பகுதி மீனவர்கள் அனைவரும் மறு உத்தரவு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் எனப் பாகிஸ்தான் ராணுவத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பலுச் அமைப்பு கடந்த ஏப்ரல் 13-ந்தேதி தனது கடற்படை பிரிவை உருவாக்கியது. அதற்கு ஒருநாள் முன்னதாக ஏப்ரல் 12-ந்தேதி மீல் தியாப் பகுதியில் பாகிஸ்தான் கடற்படையின் ரோந்துப்படகை குறிவைத்து தனது முதல் கடற்படை நடவடிக்கையை தொடங்கியிருந்தது. இதில் 3 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர்.

SCROLL FOR NEXT