காவல் நிலையமாக மாற்றப்பட்ட ஹிட்லர் வீடு
உலகம்

ஹிட்லர் பிறந்த வீட்டை போலீஸ் நிலையமாக மாற்றிய ஆஸ்திரிய அரசு

உலகத்தையே மிரளவைத்த சர்வாதிகாரி ஹிட்லரின் வீடு ஆஸ்திரியாவின் ஜெர்மனி எல்லை நகரமான பிரவுனாவ் அம் இன் பகுதியில் அமைந்துள்ளது. இந்த வீடு இப்போது போலீஸ் நிலையமாக மாற்றப்பட்டு உள்ளது.

ஆஸ்திரியாவில் புதிய நாசி ஆதரவாளர்கள் ஹிட்லரின் வீட்டை வழிபாட்டு தலமாகவோ, புனித தலமாகவோ மாற்றுவதை தவிர்க்கும் நோக்கத்தில் ஆஸ்திரியா அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

1889-ம் ஆண்டில் ஹிட்லர் பிறந்த இந்த பாரம்பரிய கட்டிடம் தனியார் வசம் இருந்தது. பின்னர் மாற்றுத் திறனாளிகளுக்கான தொண்டு நிறுவனத்தின் பயன்பாட்டில் இருந்த இந்த வீட்டை 2017-ல் ஆஸ்திரிய அரசு தனது வசமாக்கியது.

ஹிட்லர் 1889-ஆம் ஆண்டு ஏப்ரல் 20-ஆம் தேதி இந்த வீட்டில் பிறந்தார். சில வாரங்களுக்குப் பிறகு அவரது குடும்பத்தினர் அங்கிருந்து குடிபெயர்ந்தனர்.

SCROLL FOR NEXT