இங்கிலாந்தில் இருந்து அமெரிக்கா சென்ற விமானம் ஒன்று அட்லாண்டிக் பெருங்கடலில் காணாமல் போனதை அடுத்து, விமானத்தின் சிதைந்த பாகங்களை அமெரிக்கா கடலோர காவல்படை கண்டுபிடித்துள்ளது.
இங்கிலாந்தில் உள்ள பெர்முடா எல்.எஃப் வேட் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவின் பாஸ்டன் லோகன் சர்வதேச விமான நிலையத்தை நோக்கி விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது.
கனடாவில் பதிவுசெய்யப்பட்ட இந்த கல்ஃப்ஸ்ட்ரீம் ஜி100 ரக விமானம், ஆறு பேர் கொண்ட குழுவுடன் சனிக்கிழமை அதிகாலை 12:41 மணியளவில் புறப்பட்டது. இந்த விமானம் மருத்துவ மீட்பு விமானமாக செயல்பட்டு வந்தது.
இதையடுத்து அல்டாண்டிக் பெருங்கடல் மேற்பரப்பில் விமானம் சென்று கொண்டிருந்தபோது, வானொலி மற்றும் ரேடார் அமைப்புகளில் கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து அந்த விமானம் அவசரநிலை மற்றும் மின்சார கோளாறுகள் குறித்து விமான நிலையத்திற்கு தகவல் தெரிவித்தது.
இந்த விமானம் அமெரிக்காவின் நாண்டக்கெட் நகரை நோக்கி சென்றுகொண்டிருந்த போது, மின்சார கோளாறு ஏற்பட்டதாக அவசர மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவித்தது.
கல்ஃப்ஸ்ட்ரீம் விமானம் சுமார் 24,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது, இரண்டு நிமிடங்களில் 13,000 அடி கீழே இறங்கியுள்ளது.
மேலும் விமானத்தில் தகவல் தொடர்பு துண்டிக்கப்படுவதற்கு முன்பு சுமார் 10,000 அடிக்கு இறங்கியதாக செய்தி வெளியாகியுள்ளது.
இதையடுத்து விமானம் மசாசூசெட்ஸ் கடற்கரையை நெருங்கிய போது வேகமாக கீழ்நோக்கி இறங்கியது.
தொடர்ந்து அவசரகால மீட்புக் குழுவினர் மீட்க வருமாறு அறிவுறுத்தப்பட்டபோது, அந்த விமானம் நான்டக்கெட் பகுதியில் கடைசியாக இருந்துள்ளது.
இந்த நிலையில் நான்டக்கெட் பகுதியில் காணாமல் போன விமானத்தை தேடும் பணியில் அமெரிக்கக் கடலோரக் காவல்படை ஈடுபட்டு வருகிறது.
மேலும் காணாமல் போன மருத்துவ விமானத்தின் சில பாகங்களை கண்டறிந்துள்ளதாக அமெரிக்க கடலோரக் காவல்படை தெரிவித்துள்ளது.
இதையடுத்து விமானத்தில் இருந்த இரண்டு விமானிகள், இரண்டு மருத்துவப் பணியாளர்கள், ஒரு நோயாளி மற்றும் அவரது உறவினர் என மொத்தம் ஆறு பேரைத் தேடும் பணியில் அமெரிக்க கடலோரக் காவல்படை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.