புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட 2026 JH2 என்ற சிறுகோள், மே 18 அன்று சந்திரனின் சுற்றுப்பாதைக்கு வெகு உள்ளே, பூமியை மிக நெருக்கமாக கடந்து செல்ல உள்ளது.
இது அப்பல்லோ வகை சிறுகோளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
சூரியனைச் சுற்றியுள்ள அதன் நீள்வட்டப் பாதை பூமியின் சுற்றுப்பாதையைக் கடக்கிறது.
இந்த சிறுகோள் இந்திய நேரப்படி இரவு சுமார் 9:53 மணியளவில் பூமிக்கு மிக அருகில் வரும்.
தற்போதைய நிலையில், இது 91,135 கிலோமீட்டர்கள் தொலைவிற்குள் கடந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. மணிக்கு சுமார் 31,248 கி.மீ. என்ற நம்பமுடியாத வேகத்தில் பயணிக்கும்.
ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் (ESA) மதிப்பீட்டின்படி, இந்தச் சிறுகோள் 15 முதல் 35 மீட்டர் அகலம் அல்லது 16 முதல் 35 மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கும்.
சுமார் 25 மீட்டருக்கும் குறைவான விண்வெளிப் பாறைகள் பூமியின் வளிமண்டலத்தில் பெரும்பாலும் எரிந்துவிடும் என்றும், அதனால் சிறிதளவோ அல்லது எந்தவொரு சேதமோ ஏற்படாது என்றும் நாசா குறிப்பிட்டுள்ளது.