உலகம்

நெதர்லாந்து இளவரசிகளை கொல்ல முயற்சி.. சதித்திட்டம் முறியடிப்பு - அதிர்ச்சி பின்னணி!

கோடாரியில் இளவரசி 'அலெக்ஸியா'-வின் பெயர், 'மொசாட்' மற்றும் நாஜிக்களின் முழக்கமான Sieg Heil போன்ற சொற்கள் செதுக்கப்பட்டிருந்தன.

நெதர்லாந்து நாட்டின் இளவரசிகள் இருவரைக் கொலை செய்யும் சதித் திட்டம் முறியடியடிக்கப்பட்டுள்ளது.

நெதர்லாந்து இளவரசி காதரினா அமாலியா (22) மற்றும் அவரது சகோதரி இளவரசி அலெக்ஸியா (20) ஆகியோரைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதாக கடந்த பிப்ரவரியில் 33 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் ஹேக் நகரில் வைத்து கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் சதித்திட்டம் குறித்த விவரங்களை நெதர்லாந்து பொது விசாரணை அலுவலகம் தற்போது வெளியிட்டுள்ளது.

ஹிட்லரின் நாஜி சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டதாக கருதப்படும் அந்த நபர் கைது செய்யப்பட்டபோது அவரிடம் இருந்து இரண்டு கோடாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஒரு கோடாரியில் இளவரசி 'அலெக்ஸியா'-வின் பெயர், இஸ்ரேலிய உளவு அமைப்பான 'மொசாட்' மற்றும் நாஜிக்களின் முழக்கமான Sieg Heil போன்ற சொற்கள் செதுக்கப்பட்டிருந்தன.

மேலும், இளவரசிகள் அமாலியா, அலெக்ஸியா ஆகியோரின் பெயர்களுடன் Bloodbath என்று எழுதப்பட்ட கையெழுத்துக் குறிப்பு ஒன்றையும் போலீசார் கண்டெடுத்தனர்.

குற்றம் சாட்டப்பட்ட அந்த நபர் நாளை (திங்கட்கிழமை) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

முன்னதாக குற்ற கும்பல்களால் தனது உயிருக்கு இருந்த அச்சறுத்தல்களால் இளவரசி அலெக்ஸியா சுமார் ஒரு ஆண்டு காலம் ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் ரகசியமாக வசித்தது குறிப்பிடத்தக்கது.