கடந்த வாரம் ஈராக்கில் கடத்தப்பட்ட அமெரிக்கப் பத்திரிகையாளர் ஷெல்லி கிட்டில்சன் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ இதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தினார்.
கடந்த மார்ச் 31 அன்று பாக்தாத்தில் ஒரு தெருவில், ஈரான் ஆதரவு பெற்ற கதாயிப் ஹிஸ்புல்லா போராளிக் குழுவால் அவர் கடத்தப்பட்டார்.
அவர் விடுவிக்கப்படுவார் என்று அக்குழு சமீபத்தில் அறிவித்தது. இருப்பினும், அவர் விடுவிக்கப்பட்டவுடன் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற நிபந்தனையையும் அக்குழு விதித்தது.
49 வயதான கிட்டில்சன், பல ஆண்டுகளாக மத்திய கிழக்கில் ஒரு சுயாதீன பத்திரிகையாளராகப் பணியாற்றி வருகிறார். கடத்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு அவர் ஈராக்கிற்குள் நுழைந்தார்.
இந்த சூழலில் அவர் விடுவிடுவிக்கப்பட்டதை உறுதி செய்துள்ள மார்கோ ரூபியோ,
அவருக்கு ஆபத்து இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் மீண்டும் மீண்டும் எச்சரித்த போதிலும், அவர் அங்கேயே தங்க முடிவு செய்தார்.
இந்நிலையில் கிட்டில்சனின் விடுதலைக்காக உழைத்த ஈராக் அதிகாரிகள், எப்.பி.ஐ மற்றும் அமெரிக்கப் பாதுகாப்புத் துறைக்கு மார்கோ ரூபியோ நன்றி தெரிவித்துள்ளார்.
கிட்டில்சன் ஈராக்கிலிருந்து பாதுகாப்பாக வெளியேறுவதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவோம் என்று தெரிவித்துள்ளார்.