உலகம்

"அமெரிக்கா ஒரு பயங்கரவாத நாடு" - வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் கொந்தளிப்பு | Kim jong un

அமெரிக்காவின் ராணுவக் கொள்கைகளே உலகெங்கிலும் அமைதியைச் சீர்குலைக்கின்றன.

வட கொரியாவின் உச்ச தலைவர் கிம் ஜாங் உன் மீண்டும் ஒருமுறை அமெரிக்காவை கடுமையாக சாடியுள்ளார்.

அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், அமெரிக்காவை ஒரு பயங்கரவாத நாடு என்று வர்ணித்தார்.

"அமெரிக்காவின் ராணுவக் கொள்கைகளே உலகெங்கிலும் அமைதியைச் சீர்குலைக்கின்றன.

தனது இறையாண்மையை பாதுகாப்பதற்காக வட கொரியா ஒருபோதும் அணு ஆயுதங்களைக் கைவிடாது. நாட்டின் பாதுகாப்புக்கு அணுசக்தித் திறன் இன்றியமையாதது" என்று அவர் கூறினார்.

ஈரான் மீது அமெரிக்கா நடத்தி வரும் தொடர் தாக்குதல்களை விமர்சித்த கிம், ஈரான் உடனான அமெரிக்காவின் போர் தனது நாடு அணு ஆயுதங்களை தக்கவைத்துக் கொள்ள எடுத்த முடிவு சரியானது என்பதை நிரூபிக்கிறது என்று குறிப்பிட்டார்.

மேலும், எதிரி தாக்குதல்களை முறியடிக்கத் தனது இராணுவம் முழுமையாகத் தயாராக இருப்பதாகவும் அவர் எச்சரித்தார்.

தென் கொரியாவை தனது நாட்டின் மிகப்பெரிய எதிரி என்று வர்ணித்த கிம், அது தனது எல்லைகளை மீறினால் இரக்கமின்றி பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்தார்.

SCROLL FOR NEXT