இந்தியாவில் இணைய சேவை மலிவாக கிடப்பதாக பரவும் கருத்துக்கள் அம்பானியின் இணைய கூலிப்படையினரால் பரப்பப்டுபவை என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் எலான் மஸ்கின் செயற்கைக்கோள் தொலைத்தொடர்பு நிறுவனமான ஸ்டார்லிங்க் சேவைகளை தொடங்குவதற்கு இறுதி ஒப்புதல் கிடைப்பதில் இழுபறி நீடிக்கிறது.
இந்த தாமதத்திற்கு இந்தியாவில் உள்ள சில பெரும் பணக்காரர்களே காரணம் என எலான் மஸ்க் அண்மையில் விமர்சித்தார். இதற்கு மத்திய அரசு வெளியுறவு அமைச்சகம் மூலம் கடும் கண்டனம் தெரிவித்தது.
இதையடுத்து மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “அன்புள்ள பிரதமர் அம்பானி அவர்களே, இந்தியாவின் உண்மையான தலைவர் நீங்கள்தான் என்பதைப் புரிந்து கொள்ளாததற்கு என் மன்னிப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்.
மாபெரும் இந்திய மக்களைச் சுரண்டும் உங்கள் ஏகபோகத்தை நீங்கள் நிலைநிறுத்த விரும்புகிறீர்கள். ஆனால், ஸ்டார்லிங்க் போட்டியிட அனுமதிப்பதைப் பரிசீலிப்பீர்களா?” என்று மஸ்க் விமர்சித்திருந்தார்.
இதையடையது இணையத்தில் இதுகுறித்து பரவலாக விவாதிக்கப்பட்டது. இதில் அம்பானிக்கு ஆதரவாக அவரின் ஜியோ சேவைகளை குறிப்பிட்டு சிலர், இந்தியாவில் இணைய சேவைகள் பரவலாகவும் மாலிவாகவும் கிடைக்கின்றன என கருத்து தெரிவித்தனர்.
ஆனால் இந்தியாவில் இணையச் சேவைகள் பரவலாகவும் மலிவாகவும் கிடைக்கின்றன என்ற கூற்றை மேட்ச்33 ஃபைனான்சியல் குரூப்பின் தலைமைச் செயல் அதிகாரி ஆரோன் பர்னெட்டின் கேள்விக்குட்படுத்தி எஸ்சில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.
இந்நிலையில் இதற்கு ரிப்ளை கொடுத்துள்ள மஸ்க்,
"அம்பானியின் இணையக் கூலிப்படையினரின் அபத்தமான வாதங்கள் அர்த்தமற்றவை. ஒருபுறம், இந்தியாவில் அம்பானியின் ஏகபோகத்தால் வழங்கப்படும் குறைந்த கட்டணங்களுடன் ஸ்டார்லிங்கால் போட்டியிட முடியாது என்று அவர்கள் கூறுகிறார்கள்.
அதே நேரத்தில், ஸ்டார்லிங்க் ஒரு மிக வலுவான போட்டியாளராக மாறும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்! இது அபத்தமானது மற்றும் மிகைப்படுத்தப்பட்டது.
ஆனால் உண்மை என்னவென்றால், அதிக போட்டி மற்றும் அதிக தேர்வுகள் மூலம் சராசரி இந்தியக் குடிமகன் பயனடைவார்" என்று மஸ்க் தெரிவித்தார்.
ஸ்டார்லிங்க் அறிமுகம் அம்பானியின் லாபத்தைக் குறைக்கக்கூடும் என்றாலும், தனது நிறுவனம் மூடப்படாது என்று மஸ்க் கூறினார்.
மேலும், வாடிக்கையாளர்களுக்கு இந்தச் சேவை மிகவும் விலை உயர்ந்ததாகத் தோன்றினால், விலைகளை குறைக்கவும் முடியும் என்றும் மஸ்க் கூறினார்.