சாந்தனு நாராயண் 
உலகம்

Adobe | அடோப் நிறுவனத்தின் சி.இ.ஓ. ராஜினாமா

அடோப் நிறுவனத்தில் சுமார் 18 ஆண்டு காலம் சி.இ.ஓ.வாக பணியாற்றி வந்த சாந்தனு நாராயண் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சான் ஜோஸை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருவது அடோப் நிறுவனம்.

இந்நிலையில், முன்னணி மென்பொருள் நிறுவனமான அடோப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக நீண்ட காலம் பணியாற்றி வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சாந்தனு நாராயண் தனது பதவியிலிருந்து விலக முடிவு செய்துள்ளார்.

இந்த தகவலை அந்த நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. புதிய தலைமை செயல் அதிகாரி தேர்வு செய்யப்படும் வரை அவர் பதவியில் தொடருவார். அதன்பின் வாரியத் தலைவராக பணியாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடோப் நிறுவனத்தில் சாந்தனு நாராயண் சுமார் 18 ஆண்டு காலம் பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT