உலகம்

‘இன்றிரவு ஈரான் மீது ‘மிகக் கடுமையான’ தாக்குதல் நடத்தப்படும்... கார்க் தீவை கைப்பற்றுவோம்’ - ட்ர்ம்ப் அச்சுறுத்தல்

வெனிசுலா பாணியில் ஈரானின் எண்ணெய் வளங்கள் கைப்பற்றப்படும்.

அமெரிக்கா இன்றிரவு ஈரான்மீது கடுமையான தாக்குதலை முன்னெடுக்கும் எனவும், ஈரானின் எண்ணெய் வள மையங்களை கைப்பற்றும் எனவும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்ட போர்நிறுத்தம் சரிந்து, இரு நாடுகளும் தொடர்ந்து தாக்குதல்களில் ஈடுபட்டு வரும் சூழலில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது

இதுதொடர்பாக ட்ரூத் சோஷியல் தளத்தில் அவர் வெளியிட்டுள்ளப் பதிவில் ,

“இன்று இரவு ஈரான்மீது அமெரிக்கா மிகக் கடுமையான தாக்குதலை தொடுக்கும். வெகு விரைவில் கார்க் தீவு மற்றும் ஈரானின் பிற எண்ணெய் உள்கட்டமைப்பு பகுதிகளை கைப்பற்றுவோம்.

வெனிசுலாவைப் போல ஈரானின் எண்ணெய் மற்றும் எரிவாயு சந்தைகள் அமெரிக்கா கட்டுப்பாட்டில் கொண்டுவரப்படும். வெனிசுலா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கும் அந்த ஏற்பாடு மிகச் சிறப்பாகப் பலனளித்து வருகிறது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ராணுவ ரீதியாக அமெரிக்காவால் கார்க் தீவைக் கைப்பற்ற முடிந்தாலும், அதை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அமெரிக்காவிற்குப் பெரும் சவாலாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.