உலக நிமோனியா தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 12ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
நிமோனியா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த 2009ஆம் ஆண்டு முதல் நவம்பர் 12ம் தேதி உலக நிமோனியா தினம் அனுசரிக்கப்படுகிறது.
'நிமோனியா கட்டுப்பாட்டின் புதிய சகாப்தம்' ('A New Era of Pneumonia Control') என்பதே இந்த ஆண்டின் கருப்பொருள் ஆகும்.
நிமோனியா என்பது நுரையீரலை பாதிக்கும் ஒரு தொற்று நோயாகும். பாக்டீரியா, வைரஸ் அல்லது பூஞ்சை தொற்றுகளால் இது ஏற்படுகிறது.
இந்த தொற்று, நுரையீரலில் உள்ள அல்வியோலி எனும் நுண்ணிய காற்றுப் பைகளில் திரவம் அல்லது சீழ் நிரம்பக் காரணமாகிறது.
இதனால், உடலுக்குப் போதுமான ஆக்ஸிஜன் கிடைப்பது கடினமாகிறது. நிமோனியா ஒன்று அல்லது இரண்டு நுரையீரல்களையும் பாதிக்கலாம்.
5 வயதுக்குட்பட்ட சிறிய குழந்தைகள், முதியவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் உலகளவில் நிமோனியா தொற்றால் அதிகம் பாதிக்கின்றனர்.
இது ஆரம்பத்தில் சாதாரண சளி, இருமல் அல்லது காய்ச்சல் என தொடங்கும். ஆனால் உடனடியாக கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடும்.
தொடர் இருமல், கடும் காய்ச்சல், சுவாசிப்பதில் சிரமம், மார்பு வலி, அதீத சோர்வு ஆகியவை நிமோனியாவுக்கான ஆரம்பகட்ட அறிகுறிகள் ஆகும்.
சோப்பு போட்டு கைகளைக் கழுவது, இருமும்போதும் தும்மும்போதும் வாயையும் மூக்கையும் மூடிக்கொள்வது, புகைப்பிடிப்பதை தவிர்ப்பது, சத்தான உணவை சாப்பிடுவது, குழந்தைகளுக்கு உரிய நேரத்தில் தடுப்பூசி செலுத்துவது நிமோனியா தொற்று பரவல் மற்றும் பாதிப்பை குறைக்கும் வழிகளாகும்.