உலகம்

ரன்வேயில் தரையிறங்கிய விமானத்தில் திடீர் தீ விபத்து: ஜப்பானில் பரபரப்பு

டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானத்தின் பின்பகுதி தீ பிடித்தது.இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

டோக்கியோ:

ஜப்பானின் டோக்கியோ நகரில் உள்ள ஹனேடா விமான நிலையத்தின் ரன்வேயில் தரையிறங்கிய விமானத்தின் பின்பகுதியில் திடீரென தீ பிடித்தது.

கடலோர காவல்படை விமானத்தின் மீது மோதியதால் தரையிறங்கிய விமானம் தீப்பிடித்ததாக தகவல் வெளியானது.

இந்த விமானத்தில் 300-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்துள்ளனர். அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன

தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தால் டோக்கியோ விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

SCROLL FOR NEXT