உலகம்

அமெரிக்காவில் மனிதர்களின் தலைமுடியால் உருவான 10 அடி உயரம் கொண்ட பந்து: ஒப்பனை கலைஞர்கள் சாதனை

அமெரிக்காவில் 68 கிலோ மனித தலைமுடி கோளம் நியூயார்க் தெருக்களில் கொண்டு செல்லப்பட்டது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மக்கள் தொகை அதிமாக உள்ள மன்ஹட்டான் என்ற பெருநகரம் உள்ளது.

இந்த பகுதியில் மனிதர்களின் தலைமுடியை கொண்டு உருவாக்கப்பட்ட 10 அடி (3 மீட்டர்) உயரமும் 150 பவுண்டு (68 கிலோ) எடையும் கொண்ட,‘தி டம்பிள்ஹேர்’ என்ற கோள வடிவத்தை உருவாக்கியுள்ளது.

இந்த உருண்டை கோளமானது CAD இண்டஸ்ட்ரீஸ் மற்றும் டெசிமேட்டட் டிசைன்ஸ் நிறுவனங்களின் ஒப்பனை பொருள் வடிவமைப்பாளர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.

k18 கூந்தல் பராமரிப்பு நிறுவனம் மற்றும் அன்காமன் கிரியேட்டிவ் ஸ்டுடியோ என்ற நிறுவனங்களுக்காக, மனிதர்களின் தலைமுடியால் உருவாக்கப்பட்ட கோள வடிவம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த கோள வடிவம், இளவேனிற் காலத்தில் மனிதர்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் ஒரு தவிர்க்கமுடியாத முடி கொட்டுதலுக்கான உருவகமாக காட்சிபடுத்தப்பட்டுள்ளது.

நியூயார்க் நகரில் உள்ள உள்ளுர் சலூன்களில் இருந்து பெறப்பட்ட மனிதர்களின் உண்மையான தலைமுடி மற்றும் செயற்கையான இழைகளின் கலவையை பயன்படுத்தி கையால் தைக்கப்பட்டுள்ளது.

தலைமுடியால் உருவாக்கப்பட்ட இந்த கோளத்தை நியூயார்க் நகரின் சாலைகள், பூங்காக்கள் மற்றும் தெருக்களில் வழியாக ஒப்பனை நிறுவன ஊழியர்கள் கொண்டு சென்று, மக்களின் கவனத்தை ஈர்த்தனர்.

இந்த சந்தை காட்சிபடுத்துதல் மன்ஹட்டான் நகரில் தொடங்கி, மீட்பேக்கிங் என்ற மாவட்டத்தில் முடிவடைந்தது.

சிகை அலங்கார ஒப்பனை கலைஞர்களின் சந்தைப் படுத்துதல் காட்சி, சமூக வலைதளத்தில் பரவி அமெரிக்க மக்களிடையே பெரும் வரவேற்பையும், கவனத்தையும் பெற்றது.