உலகம்

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவு

தேசிய நில அதிர்வு ஆய்வு மையத்தின் தகவல்படி, இந்த நிலநடுக்கம் காலை நேரத்தில் ஏற்பட்டது.

இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் இன்று 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் மையப்புள்ளி, பாலு நகருக்குத் தென்கிழக்கே சுமார் 42 கி.மீ தொலைவில், 10 கி.மீ ஆழத்தில் பதிவாகி உள்ளது.

தேசிய நில அதிர்வு ஆய்வு மையத்தின் தகவல்படி, இந்த நிலநடுக்கம் காலை நேரத்தில் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்படும் அபாயம் எதுவும் இல்லை என இந்தோனேசியாவின் புவி இயற்பியல் நிறுவனம் அறிவித்துள்ளது.

உடனடியாக உயிர்சேதம் அல்லது பெரிய அளவிலான பொருட்சேதம் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.