இத்தாலிய ஆயர்கள் மாநாட்டில் வெளியிடப்பட்ட அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த இருபது ஆண்டுகளில் இத்தாலியில் 58 பாதிரியார்கள் சிறார் பாலியல் துஷ்பிரயோக வழக்கில் குற்றவாளிகளாக கண்டறியப்பட்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று புதன்கிழமை (நவம்பர் 25) நடைபெற்ற இத்தாலிய ஆயர்கள் மாநாட்டில் வெளியிடப்பட்ட அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொலோக்னா பல்கலைக்கழகம் மற்றும் புளோரன்ஸில் உள்ள 'இன்ஸ்டிட்யூட்டோ டெக்லி இன்னோசென்டி' ஆகிய அமைப்புகளின் ஆய்வாளர்கள் இணைந்து இந்த அறிக்கையை தயாரித்தனர்.
அதன்படி, தேவாலய அதிகாரிகளிடம் புகாரளிக்கப்பட்ட 378 வழக்குகளில், 880 தனித்தனி சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதில் பாதிக்கப்பட்ட 385 பேரில் சுமார் 70 சதவீதம் பேர் சிறுவர்கள்; குறிப்பாக 14 முதல் 17 வயதுக்குட்பட்டவர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்ட 356 பேரில், 123 பேர் இத்தாலிய நீதித்துறை முன் நிறுத்தப்பட்டு அவர்களில் 57 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், திருச்சபை தரப்பில் 218 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, சுமார் 70 சதவீதம் பேர் குற்றவாளிகள் எனக் கண்டறியப்பட்டனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் 87 பேர் பதவி நீக்கம் அல்லது இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர், 39 பேர் ஓய்வு பெற்றுவிட்டனர், மற்றும் 67 பேர் உயிரிழந்துவிட்டனர்
தேவாலய ஆவணங்களில் பதிவு செய்யப்பட்ட புகார்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு இந்தத் தரவுகள் திரட்டப்பட்டுள்ளன. உண்மையில் நடந்த சம்பவங்களின் எண்ணிக்கை இதை விட அதிகமாக இருக்கும் என கருதப்படுகிறது.
இதற்கிடையில், திருச்சபை 218 பாதிரியார்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது. அவர்களில் சுமார் 70 சதவீதம் பேர் குற்றவாளிகள் எனக் கண்டறியப்பட்டனர்.
இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தனி ஹெல்ப்லைன் தொடங்கவும், புகார்களை தொடர்ந்து கண்காணிக்க நிரந்தர கண்காணிப்பகத்தை அமைக்கவும் இத்தாலிய ஆயர்கள் மாநாடு முன்வந்துள்ளது.
இதனிடையே இத்தாலியின் 'ரெட்டே எல் அபுசோ' என்ற அமைப்பு, 2020க்குப் பிறகு மட்டும் சுமார் 4,400 பேர் பாதிரியார்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆயர்கள் மாநாட்டில் வெளியான இந்த அறிக்கை போதுமானதாக இல்லை என விமர்சித்துள்ளது.