உலகம்

ஈரானுக்கு ராணுவ உதவி அளிக்கும் நாடுகளுக்கு 50% வரி விதிக்கப்படும் - ட்ரம்ப் மிரட்டல்

ஈரானுக்கு ராணுவ ஆயுதங்களை வழங்கும் அனைத்து நாடுகள் மீதும் 50% இறக்குமதி வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.

ஈரானுக்கு ராணுவ ஆயுதங்களை வழங்கும் நாடுகளுக்கு 50% ஏற்றுமதி வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இந்த விதி உடனடியாக அமலுக்கு வருவதாகவும், இதில் எந்த விதிவிலக்கும் அளிக்கப்படாது எனவும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிற்கும், ஈரானுக்கும் இடையே இரண்டு வார கால போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளநிலையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஈரானின் ராணுவ பலத்தை கட்டுப்படுத்தவும், அந்நாட்டிற்கு ஆதரவு அளிக்கும் சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளுக்கு பொருளாதார ரீதியாக அழுத்தம் கொடுக்கவும் அமெரிக்கா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

அதே சமயம், ஈரான் தனது அணு ஆயுதத் திட்டத்தைக் கைவிட்டால், அந்நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகள் மற்றும் வரிகளில் தளர்வுகள் அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.