உலகம்

இத்தாலி அருங்காட்சியகத்தில் ரூ.770 கோடி மதிப்புள்ள 4 அபூர்வ ஓவியங்கள் கொள்ளை

ஓவியங்களின் திருட்டு குறித்து இத்தாலி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இத்தாலியின் சிசிலி தீவில் உள்ள மெசினா அருங்காட்சியகத்தில் புகழ்பெற்ற ஓவியர் அன்டோனெல்லோ டா மெசினா வரைந்த சுமார் ரூ.770 கோடி மதிப்புள்ள 4 அபூர்வ ஓவியங்கள் திருடப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது.

அருங்காட்சியகத்தில் பாதுகாவலர்கள் இருந்தபோதும், பாதுகாப்பு மற்றும் எச்சரிக்கை அலார அமைப்புகளை முறியடித்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், பாதுகாக்கப்பட்ட கண்ணாடி பெட்டியை உடைத்து 4 ஓவியங்களை கொள்ளையடித்துச் சென்றனர்.

தப்பியோடும் அவசரத்தில் 2 ஓவியங்களை அங்கேயே போட் டுவிட்டுச் சென்றுள்ளனர். இந்த ஓவியங்களின் திருட்டு குறித்து இத்தாலி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.