உலகம்

பாகிஸ்தானில் துணிகரம்: பயணிகள் ரெயில் மீது வெடிகுண்டு வாகனம் மோதியதில் 24 பேர் பலி

விடுமுறைக்குச் சென்ற ராணுவ வீரர்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் குவெட்டா அருகே ஜாபர் விரைவு ரெயில் மீது வெடிகுண்டு இருந்த வாகனத்தை பயங்கரவாதிகள் மோதினர். இந்த தாக்குதலில் 24 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஜாபர் விரைவு ரெயில் பெஷாவரில் இருந்து குவெட்டா நகருக்கு சென்று கொண்டிருந்த போது சிந்து-பலூசிஸ்தான் எல்லையில் தாக்குதல் நடத்தப்பட்டது.

விடுமுறைக்குச் சென்ற ராணுவ வீரர்களைக் குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி இருக்கலாம் என தகவல் வெளியானது.

ரெயில் பெட்டிகள் மீது வெடிபொருட்கள் வைக்கப்பட்ட வாகனம் மோதியதில் பல பெட்டிகள் தடம் புரண்டன. இரு பெட்டிகள் முழுதும் தீப்பற்றியது. இதில் 80 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.

ஜாபர் விரைவு ரெயில் மீது தாக்குதல் நடத்தி 24 பேர் கொல்லப்பட்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT