பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவுக்கு தெற்கே கடற்கரை மாகாணமான படாங்கஸில் உள்ள லிபா நகரத்தில் அமைந்துள்ள பெர்னாண்டோ விமான தளம். இந்த தளத்தில் இருந்து விமானங்கள் மூலம் விமானிகள் போர் பயிற்சி மேற்கொண்டு வந்தனர்.
SF-260 போர் விமானம் மூலம் வீரர்கள் போர் பயிற்சி மேற்கொண்டபோது, திடீரென இரண்டு விமானங்கள் எதிர்பாராத வகையில் நேருக்கு நேர் மோதிக் கொண்டனர். இந்த விமானம் இரண்டு சீட் கொண்டவை. இரண்டு விமானங்களிலும் இருந்து 4 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்தை தொடர்ந்து அனைத்து SF-260 போர் விமானங்களையும் தற்காலிகமாக தரையிறக்க பிலிப்பைன்ஸ் விமானப்படை உத்தரவிட்டுள்ளது. இந்த விமானங்கள் இத்தாலியில் இருந்து வாங்கப்பட்டவை. எத்தனை விமானங்களில் விமானப்படையில் உள்ளது என்ற விவரம் வெளியிடப்படவில்லை.
நிதி நெருக்கடியால் ராணுவத்தை நவீனப்படுத்த முடியாமல் பிலிப்பைன்ஸ் திணறி வருகிறது. இந்த நிலையில் இந்த விபத்து விமானப்படைக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.