காங்கோவின் வர்த்தகர்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் குறைந்தது 12 பேர் உயிரிழந்தனர்.
மத்திய கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ. இந்நாட்டில் படகு போக்குவரத்து அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருவதால் அவ்வப்போது விபத்துகளும் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் கிழக்கு காங்கோவின் கிவு ஏரியில் வர்த்தகர்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் குறைந்தது 12 பேர் உயிரிழந்தனர்.
தெற்கு கிவு மாகாணத்தில் உள்ள இட்ஜ்வி தீவில் கடந்த சனிக்கிழமை இரவு 50க்கும் மேற்பட்டோரை ஏற்றிச் சென்ற படகு கிஷ்கி என்ற கிராமம் அருகே சென்றபோது ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது..
12 உயிரிழந்த நிலையில் பலர் மாயமாகினர். இதுவரை சுமார் 15 பேர் மீட்கப்பட்டனர். எஞ்சியோரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அந்தப் படகு, இட்ஜ்வி தீவில் உள்ள பிவினாவிலிருந்து போஜாவுக்கு மீன் வியாபாரிகளையும் பொருட்களையும் ஏற்றிச் சென்றுகொண்டிருந்தது என்று உள்ளூர் நிர்வாகி முஹிந்தோ நடம்புகா பாஸ்கல் தெரிவித்தார்.