அமெரிக்கா போர் விமானம்
உலகம்

ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்காவுக்கு ஏற்பட்ட இழப்பு எவ்வளவு தெரியுமா?

30 மில்லியன் டாலர் அளவிலான 12 நவீன போர் விமானங்களை அமெரிக்கா இழந்துள்ளது.

அணுஆயுத திட்டத்திற்கான யுரேனியத்தை செரிவூட்டும் பணியில் ஈரான் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததாக அமெரிக்கா குற்றம்சாட்டியது. ஈரான் அணுஆயுதத்தை தயாரிக்கும் திறன் பெற்றால் இஸ்ரேலும் தங்கள் நாட்டிற்கு அச்சுறுத்தல் எனக் கூறியது. இரண்டு நாடுகளும் சேர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் 28-ந்தேதி ஈரான் மீது கடுமையான வகையில் தாக்குதல் நடத்தியது. அதேவேளையில் ஈரானும் பதிலடி தாக்குதல் நடத்தியது.

ஈரானுக்கு அருகில் உள்ள ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா உள்பட பல நாடுகளில் அமெரிக்காவின் ராணுவ தளம் உள்ளது. இந்த தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனால் அமெரிக்காவுக்கு அதிகப்படியான இழப்புகள் ஏறு்பட்டது.

3.3 பில்லியன் அமெரிக்க டாலர்

இந்த நிலையில் ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா ராணுவ விமானங்கள் மற்றும் டிரோன்கள் என குறைந்தது 81 ராணுவ விமானங்களை இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் ஒட்டுமொத்தமாக 3.3 பில்லியன் அமெரிக்கா டாலரை இழந்துள்ளது.

F-35A லைட்னிங் II ஸ்டீல்த் விமானம், F-15 விமானங்கள், MQ-1 ரீப்பர் டிரோன்கள் போன்ற அதிநவீன விமானங்களையும் இந்த சண்டையில் இழந்துள்ளது. ஒரு F-15 விமானத்தின் விலை 30 மில்லியன் டாலரை விட அதிகமாகும் எனக் கூறப்படுகிறது.

ஒரு டிரோனின் விலை 30 மில்லியன் டாலர்

அதேபோல் MQ-9 ரீப்பர் டிரோனின் விலையும் சுமார் 30 மில்லியன் முதல் 50 மில்லியன் டாலர் வரை இருக்கும் எனக் கூறப்படுகிறது.

ஐந்தாவது ஜெனரேசன் போர் விமானமான F-34A, அமெரிக்காவின் மிகவும் அதிநவீன போர் விமானமாக கருதப்படுகிறது. இதன் விலை 92 மில்லியன் டாலரை விட அதிகம் எனக் கூறப்படுகிறது.

தகவல் அடிப்படையில் அமெரிக்கா 12 F-15E விமானங்களை இழந்தது. F-35A லைட்னிங் II விமானத்தை இழந்துள்ளது. இரண்டு A-10 தண்டர்போல்ட் II கிரவுண்ட்-தாக்குதல் விமானத்தை இழந்துள்ளது. இதேபோல் KC-135 ஆகாயத்தில் எரிபொருள் நிரப்பும் விமானத்தையும் இழந்துள்ளது.

மார்ச் 2-ந்தேதி குவைத்தின் தவறுதலாக F-15 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. மற்றொரு விமானம் ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல் அடிப்படையில் கூறப்படுகிறது.

8 போர் விமானங்கள் சேதம்

ஜோர்டானில் உள்ள விமான தளத்தில் ஈரான் நடத்திய தாக்குதலில் 8 F-15Es விமானங்கள் சேதமடைந்துள்ளது.

ஆனால் வெள்ளை மாளிகை மற்றும் பென்டகள் இது குறித்து தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை.

SCROLL FOR NEXT