உலகம்

மியாமி அருகே ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் ஒருவர் பலி

ஹெலிகாப்டரில் இருந்த மூன்று பேரில் ஒருவர் உயிரிழந்ததாக அமெரிக்க கடலோர காவல்படை உறுதிப்படுத்தியுள்ளது.

மியாமி அருகே பிஸ்கேன் வளைகுடாவில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் ஒருவர் உயிரிழந்ததாகவும், மேலும் இருவர் படுகாயம் அடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கீ பிஸ்கேன் பகுதிக்கு அப்பால் உள்ள பில் பேக்ஸ் மாநிலப் பூங்காவிற்கு அருகே, நண்பகலுக்குச் சற்று முன்பு ஹெலிகாப்டர் விழுந்ததாக மியாமி-டேட் ஷெரிப் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஒருவர் உயிரிழப்பு:

ஹெலிகாப்டரில் இருந்த மூன்று பேரில் ஒருவர் உயிரிழந்துவிட்டதாகவும், மற்ற இருவரும் உள்ளூர் சிகிச்சை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அமெரிக்க கடலோர காவல்படை உறுதிப்படுத்தியுள்ளது.

ராபின்சன் R44 II ஹெலிகாப்டர் புகைப்படம் எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன என தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் கூறியுள்ளது. கடலோர காவல்படை மட்டுமின்றி, பல உள்ளூர் அமைப்புகளை சேர்ந்த தீயணைப்பு வீரர்களும் இந்த விபத்து நடந்த இடத்திற்கு விரைந்தனர்.

ஹெலிகாப்டரில் இருந்தவர்களை அதிகாரிகள் உடனடியாக அடையாளம் காட்டவில்லை.

SCROLL FOR NEXT