பஜ்ரங் புனியா ஆண்களுக்கான 65 கிலோ எடை ப்ரீஸ்டைல் பிரிவில் ரீபேக்கேஜ் சுற்றுக்கு முன்னேறினார். அதில் தோல்வியடைந்ததால் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்.
24 பேர் கொண்ட இந்திய அணி பாரிஸ் சென்றிருந்தது. பஜ்ரங், பிரவீண் ராணா (74 கிலோ), சத்திவார்ட் கார்டியன் (97 கிலோ) ஆகியோர் தொடக்க சுற்றில் சிறப்பாக செயல்பட்டனர். ஆனால், காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அனைவரும் தோல்வியை சந்தித்தனர். பெண்கள் பிரிவில் ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சாக்சியும் ஏமாற்றம் அளித்தார்.