செய்திகள்

உலக துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப்: இந்திய வீரர் அன்கூர் மிட்டல் வெள்ளி வென்றார்

ரஷ்யாவில் நடைபெற்ற உலக துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில், ஆடவருக்கான டபுள் டிராப் பிரிவில் இந்திய வீரர் அன்கூர் மிட்டல் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

மாலை மலர்

மாஸ்கோ:

ரஷ்ய நாட்டின் மாஸ்கோ நகரில் உலக துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆடவருக்கான டபுள் டிராப் பிரிவு இறுதி போட்டியில் இந்தியாவின் அன்கூர் மிட்டல் வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

ரஷ்யாவின் விடாலி போகேவுக்கும், இந்தியாவின் அன்கூர் மிட்டலுக்கும் இடையே இறுதி போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது.

ஆரம்பம் முதலே அன்கூர் கடும் சவால் கொடுத்தார். இறுதியில், மொத்தமுள்ள 80 புள்ளிகளில் 66 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கம் பெற்றார்.

இதேபோல், ஜூனியர் பிரிவில் அறிமுக வீரரான ஆழ்வார் ரிஸ்வி 66 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.