செய்திகள்

உலக பாரா தடகளம்: இந்தியாவுக்கு மேலும் இரு பதக்கம்

லண்டனில் மாற்றுத் திறனாளிகளுக்கான உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் உயரம் தாண்டுதலில் இந்தியா மேலும் 2 பதக்கங்களை தட்டி சென்றது.

மாலை மலர்

லண்டன்:

லண்டனில் நடந்து வந்த மாற்றுத் திறனாளிகளுக்கான உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் நேற்று முன்தினம் நடந்த ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் அமெரிக்க வீரர் சாம் கிரேவி 1.86 மீட்டர் உயரம் தாண்டி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். இந்திய வீரர்கள் ஷரத்குமார் (1.84 மீட்டர்), வருண் பட்டி (1.77 மீட்டர்) ஆகியோர் முறையே வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை தட்டிச் சென்றனர். வருண் பட்டி பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தடகளத்தில் இந்தியா ஒரு தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என்று மொத்தம் 5 பதக்கங்கள் வென்று இருக்கிறது.