ஹராரே:
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று ஜிம்பாப்வேயில் நடந்து வருகிறது. இதில் லீக் சுற்று முடிந்து தற்போது சூப்பர் சிக்ஸ் ஆட்டங்கள் நடக்கின்றன.
ஹராரேவில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் ஜிம்பாப்வே-அயர்லாந்து அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே 9 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் சேர்த்தது. ஒரு கட்டத்தில் 7 விக்கெட்டுக்கு 139 ரன்களுடன் பரிதவித்த ஜிம்பாப்வே அணி சிகந்தர் ராசாவின் (69 ரன், 4 பவுண்டரி, 3 சிக்சர்) அரைசதத்தால் கவுரவமான ஸ்கோரை எட்டியது.
அடுத்து களம் இறங்கிய அயர்லாந்து 34.2 ஓவர்களில் 104 ரன்னில் சுருண்டது. இதன் மூலம் ஜிம்பாப்வே 107 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சிசோரா, கிரீமர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
சூப்பர் சிக்ஸ் சுற்றில் நாளை அயர்லாந்து-ஸ்காட்லாந்து அணிகள் சந்திக்கின்றன.