செய்திகள்

உலகக் கோப்பை வாள்வீச்சு: தமிழக வீராங்கனை பவானி தேவிக்கு தங்கம்

ஐஸ்லாந்து நாட்டில் நடைபெற்ற சர்வதேச போட்டியான சேட்லைட் உலகக்கோப்பை வாள்வீச்சில் தமிழக வீராங்கனை பவானி தேவி தங்கம் வென்றார்.

சர்வதேச போட்டியான சேட்லைட் உலகக் கோப்பை வாள்வீச்சு பந்தயம் ஐஸ்லாந்து நாட்டில் நடந்தது.

இதன் ‘சேபர்’ பிரிவில் பங்கேற்ற தமிழக வீராங்கனை சி.ஏ. பவானி தேவி தங்கம் வென்றார். அவர் இறுதிப் போட்டியில் 15-13 என்ற கணக்கில் இங்கிலாந்து வீராங்கனை சாரா ஹம்சனை வீழ்த்தினார்.

உலக அளவில் வாள் வீச்சில் இந்தியாவுக்கு தங்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமையை பவானி தேவி பெற்றார். இதற்கு முன்பு அவர் ஆசிய சேட்லைட் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று இருந்தார்.

SCROLL FOR NEXT