அப்போது சூழ்நிலைக்கு ஏற்ப நாங்கள் 4-வது இடத்தில் வீரர்களை களம் இறக்கிக் கொள்வோம் என்று அணி நிர்வாகம் கூறியது. லீக் போட்டிகள் முழுவதும் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் சிறப்பாக விளையாடியதால் அந்தக் குறை தெரியவில்லை.
அரையிறுதியில் 5 ரன்களுக்குள் 3 விக்கெட்டுக்களை இழந்ததால் நான்காவது பேட்ஸ்மேன் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இந்நிலையில் முன்னாள் இந்திய அணியின் தேர்வுக்கு தலைவராக திலிப் வெங்சர்க்காரும் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து திலிப் வெங்சர்க்கார் கூறுகையில் ‘‘விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் தொடக்கத்திலேயே ஆவுட்டாகிவிட்டால், 4-வது இடத்தில் களம் இறங்க தரமான பேட்ஸ்மேன் தேவை என்று அணி அறிவிக்கப்பட்டதில் இருந்து கூறி வருகிறேன்.
இந்த பிரச்சனை அரையிறுதி வரை எழும்பவில்லை. ஏனென்றால், அவர்கள் இருவரும் ஒவ்வொரு போட்டியிலும் ரன்கள் குவித்தனர். இறுதியில் அவர்கள் இருவரும் ஆட்டமிழந்தபோது நாம் 240 ரன்களை சேஸிங் செய்ய 4-வது பேட்ஸ்மேனை தேடவேண்டிய நிலை ஏற்பட்டது.
நாம் நான்கு விக்கெட் கீப்பர்களுடன் விளையாடியது விசித்திரமாக இருந்தது. நான்கு விக்கெட் கீப்பர்களுடன் விளையாடும் ஒரே அணி இந்தியா மட்டுமே. கிரிக்கெட் வரலாற்றில் இப்படி நிகழ்ந்தது கிடையாது.
தினேஷ் கார்த்திக்கை நீங்கள் பியூர் பேட்ஸ்மேனாக களம் இறக்கி விளையாடுகிறீர்கள் என்றால், இந்தியாவில் அந்த இடத்திற்கான பேட்ஸ்மேன்களை உருவாக்குவதில் வெற்றிடம் உள்ளதா?. ரஞ்சி டிராபியில் 900, 1000 மற்றும் 1200 ரன்கள் அடித்த பேட்ஸ்மேன்கள் எங்கே?. அவர்கள் தராமானவர்கள் இல்லையா? அல்லது ரஞ்சி டிராபி தரமானது இல்லையா?