செய்திகள்

3-வது இடத்திற்கான ஆட்டம்- முதல் பாதியில் பெல்ஜியம் 1-0 என முன்னிலை

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் 3-வது இடத்திற்கான ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிராக முதல்பாதி நேரத்தில் பெல்ஜியம் 1-0 என முன்னிலைப் பெற்றுள்ளது. #BELENG #ENGBEL

மாலை மலர்

இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய 4-வது நிமிடத்திலேயே இங்கிலாந்திற்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

பெல்ஜியம் அணியின் தாமஸ் மியுனியர் 4-வது நிமிடத்திலேயே கோல் அடித்து அசத்தினார். இவர் அரையிறுதியில் சஸ்பெண்ட் காரணமாக இடம்பெறாதது குறிப்பிடத்தக்கது.

அதன்பின் இரு அணி வீரர்களும் 45 நிமிடங்கள் வரை கோல் அடிக்கவில்லை. இதனால் முதல் பாதி நேரத்தில் பெல்ஜியம் 1-0 என முன்னிலையில் உள்ளது.