செய்திகள்

ஸ்பெயின் - ரஷியா நாக்அவுட் போட்டி- முதல் பாதி நேர ஆட்டம் 1-1 என சமநிலை

ஸ்பெயின் - ரஷியா இடையிலான ஆட்டம் முதல் 45 நிமிடத்தில் 1-1 சமநிலையில் முடிந்துள்ளது. #WorldCup2018 #ESPRUS

மாலை மலர்

ஆட்டம் தொடங்கியது முதலே ஸ்பெயின் ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 12-வது நிமிடத்தில் ஸ்பெயினுக்கு ப்ரீ ஹிக் வாய்ப்பு கிடைத்தது. ஸ்பெயின் வீரர் தூக்கி அடித்த பந்து ரமோஸ் நோக்கி வந்தது. அந்த பந்தை ரமோஸ் கோல் எல்லைக்குள் புகுத்த நினைத்தார். அதேவேளையில் ரஷியா வீரர் செர்கெய் இக்னாசேவிச் தடுக்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக செர்கெய் காலில் பந்து பட்டு கோல் எல்லைக்குள் சென்றது. இதனால் ஸ்பெயினுக்கு ஓன் கோல் மூலம் ஒரு கோல் கிடைத்தது.