செய்திகள்

உருகுவேயை 2-0 என எளிதாக வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது பிரான்ஸ்

உலகக்கோப்பை கால்பந்து தொடரின் முதல் காலிறுதி ஆட்டத்தில் உருகுவேயை 2-0 என வீழ்த்தி பிரான்ஸ் அரையிறுதிக்கு முன்னேறியது. #WorldCup2018

மாலை மலர்

தொடக்கம் முதலே பிரான்ஸ் அணி ஆதிக்கம் செலுத்தின. ஆனால் உருகுவே அணியின் டிபென்ஸ்-ஆல் பிரான்ஸ் கோல் அடிக்க திணறின. இதற்கிடையே உருகுவே அணியும் கோல் அடிக்க முயற்சி செய்தன. ஆட்டத்தின் 40-வது நிமிடத்தில் பிரான்ஸ் அணிக்கு ப்ரீ ஹிக் வாய்ப்பு கிடைத்தது. கிரிஸ்மான் பந்தை உதைக்க வரானே அதை தலையால் முட்டி கோலாக்கினார். இதனால் பிரான்ஸ் 1-0 என முன்னிலைப் பெற்றது. அதன்பின் உருகுவே அணியால் கோல் அடிக்க இயலவில்லை. ஆகுவே, முதல் பாதி நேரத்தில் பிரான்ஸ் 1-0 என முன்னிலைப் பெற்றுள்ளது.

2-வது பாதி நேரத்திலும் பிரான்ஸ் அணியின் ஆதிக்கம் நீடித்தது. 61-வது நிமிடத்தில் ஒரு குறிப்பிட்ட தூரத்தில் இருந்து கிரிஸ்மான் பந்தை புயல் வேகத்தில் அடித்தார். அதை உருகுவே கோல்கீப்பர் தடுத்து விட முயன்றார். அப்போது பந்து அவரது கையில் பட்டு கோல் கம்பத்திற்குள் நுழைந்தது. இதனால் பிரான்ஸ் 2-0 என முன்னிலைப் பெற்றது.