செய்திகள்

உலக குத்துச்சண்டை: இந்திய வீரர்கள் மனோஜ், கவிந்தர் வெற்றி

ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் நடந்து வரும் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர்கள் மனோஜ்குமார், கவிந்தர் பிஸ்ட் வெற்றி பெற்றுள்ளனர்.

மாலை மலர்

ஹம்பர்க் :

19-வது உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான 69 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்தியாவின் மனோஜ்குமார் 3-2 என்ற புள்ளி கணக்கில் மால்டோவா வீரர் வாசிலி பெலோசை தோற்கடித்தார்.

இன்னொரு இந்திய வீரர் கவிந்தர் பிஸ்ட் (52 கிலோ) 3-2 என்ற புள்ளி கணக்கில் ஜப்பானின் ரையூசி பாபாவை வெளியேற்றினார். ஆசிய விளையாட்டில் வெண்கலம் வென்றவரான இந்தியாவின் சதீஷ்குமார் ஏமாற்றம் அளித்தார்.

91 கிலோவுக்கு மேற்பட்டோருக்கான பிரிவில் களம் இறங்கிய சதீஷ்குமார் தனது முதல் ஆட்டத்தில் 0-5 என்ற புள்ளி கணக்கில் இரண்டுமுறை உலக சாம்பியனான முகமத்ரசுல் மஜித்டோவிடம் (அஜர்பைஜான்) வீழ்ந்தார்.