செய்திகள்

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: காலிறுதியில் கிடாம்பி ஸ்ரீகாந்த் தோல்வி

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் காலிறுதியில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த், உலக நம்பர்-1 வீரரிடம் தோல்வியடைந்தார்.

மாலை மலர்

ஏற்கனவே சன் வான் ஹோ-வை இந்தோனேசிய சூப்பர் சீரிஸ் மற்றும் ஆஸ்திரேலிய சூப்பர் சீரிஸ் ஆகிய தொடர்களில் கிடாம்பி ஸ்ரீகாந்த் வீழ்த்தியிருந்தார். இதனால் இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 21-14, 21-18 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்து கிடாம்பி ஸ்ரீகாந்த் ஏமாற்றம் அளித்தார்.

முதல் சுற்றில் சன் வான் 6-1 என முன்னிலையில் இருந்தார். அதன்பின் கிடாம்பி அடுத்தடுத்து புள்ளிகள் பெற 5-6 என ஒரு புள்ளி பின்தங்கினார். பின்னர் 8-8 என சமநிலை பெற்றார்.

பாதி இடைவேளை நேரத்தில் வான் 11-8 என முன்னிலைப் பெற்றார். பின்னர் கிடாம்பி 12-13 என நெருங்கி வந்தார். பின்னர் சன் வான் 15-12 என முன்னிலைப் பெற்றார். அதன்பின் சன் வான் 19-13 அதிக முன்னிலைப் பெற்று இறுதியில் 21-14 என முதல் செட்டை கைப்பற்றினார்.