உயிரிழப்பு 
செய்திகள்

சென்னையில் விஷ வாயு தாக்கி 2 பேர் உயிரிழப்பு

சென்னை பட்டினப்பாக்கம் நிர்மலா சீனிவாசபுரத்தில் கழிவுநீர் தொட்டியில் சுத்தம் செய்தபோது விஷ வாயு தாக்கி 2 பேர் உயிரிழந்தனர்.

மாலை மலர்

சென்னை:

சென்னை பட்டினப்பாக்கம் சினிவாசபுரத்தில் இன்று கழிவுநீர் தொட்டியில் சுத்தம் செய்யும் பணியில் சயின் ஷா ஈடுபட்டிருந்த நிலையில் தொட்டிக்குள் இருந்து விஷ வாயு வெளிப்பட்டதால் அவர் மயங்கி விழுந்தார்.  அவரை காப்பாற்றச் சென்ற நாகராஜ் அவ்விடத்தில் மயங்கி விழுந்தார்.  

இந்நிலையில் கழிவுநீர் தொட்டியில் இருந்த இருவரையும் தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்த நிலையில் மீட்டனர்.

இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.