தற்கொலை 
செய்திகள்

ஓசூரில் கூலித் தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை

ஓசூரில் திருமணம் ஆகாத ஏக்கத்தில் மனமுடைந்த கூலித் தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மாலை மலர்

ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஒன்னல்வாடி பகுதியை சேர்ந்தவர் முனிராஜ் (35). கூலி தொழிலாளி. இவர் திருமணம் ஆகாதவர். மேலும் முனிராஜுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

திருமணம் ஆகாததால் அவர் விரக்தியுடனும், மனஉளைச்சலுடனும் இருந்தாராம். இந்நிலையில் நேற்று வீட்டில் அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இது குறித்து அவரது தாய் முருகம்மாள் ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்ததன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.