செய்திகள்

தக்கலை அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

தக்கலை அருகே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

மாலை மலர்

தக்கலை:

தக்கலையை அடுத்த பாலப்பள்ளம் குன்னத்து கோணம் பகுதியை சேர்ந்தவர் எசுதாசன். இவரது மகன் ஜெபசிங் (வயது 24). கட்டிட தொழிலாளி.

இவர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். பல இடங்களில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகாததால் மனம் உடைந்து காணப்பட்டார். நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத போது விஷம் குடித்து மயங்கிக்கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இன்று அதிகாலை ஜெபசிங் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுபற்றி ஜெபசிங்கின் தந்தை ஏசுதாசன் தக்கலை போலீசில் புகார் செய்தார். சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரத்தினராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.