விஷம் 
செய்திகள்

ஊத்துக்கோட்டை அருகே தொழிலாளி தற்கொலை

ஊத்துக்கோட்டை அருகே உடல்நிலை சரியில்லாததால் மனம் உடைந்த தொழிலாளி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

ஊத்துக்கோட்டை:

ஊத்துக்கோட்டை அருகே உள்ள கீழ்மருமன்னூர் கிராமத்தை சேர்ந்தவர் அருள் (54) கூலி தொழிலாளி. உடல் நிலை பாதிக்கப்பட்ட அவர் டாக்டர்களிடம் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. இதனால் மனம் உடைந்த அருள் வீட்டில் இருந்த பூச்சி மருந்து குடித்து மயங்கினார்.

ஆபத்தான நிலையில் இருந்த அவரை சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து ஊத்துக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் ராக்கி குமாரி விசாரணை செய்து வருகிறார்.

SCROLL FOR NEXT