செய்திகள்

திருவாரூர் அருகே தொழிலாளி மர்ம மரணம்

திருவாரூர் அருகே ஓ.என்.ஜி.சி.க்கு சொந்தமான இடத்தில் தொழிலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து அவரது மனைவி போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

திருவாரூர்:

திருவாரூர் அருகே உள்ள கீழகூத்தங்குடியை சேர்ந்த பக்கிரிசாமி மகன் விஜயகுமார் (வயது 34) விவசாய கூலி தொழிலாளி. இவர் மேலகூத்தங்குடியில் உள்ள ஓ.என்.ஜி.சி.க்கு சொந்தமான இடத்தில் மர்மமான முறையில் இறந்து கிடப்பது தெரியவந்தது.

அவரது தலையில் காயம் இருந்தது. இதுபற்றி விஜயகுமாரின மனைவி பொன்மதி திருவாரூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். அதில் தனது கணவர் சாவில் மர்மம் உள்ளதாக கூறிஉள்ளார்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.