திருப்பூர்:
தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாக்கடை கால்வாயில் பிணமாக கிடந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
திருப்பூர் காலேஜ் ரோடு கொங்கணகிரி மூன்றாவது வீதியில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இன்று காலை டாஸ்மாக் கடையின் அருகே உள்ள வீட்டிற்கு வெளியே அடையாளம் தெரியாத நபர் சாக்கடையில் பிணமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக திருப்பூர் வடக்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாக்கடை கால்வாயில் பிணமாக கிடந்தவரின் உடலை மீடடு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இறந்து கிடந்தவர் யார்? எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடிபோதையில் மயங்கி விழுந்து இறந்தாரா? அல்லது மர்மநபர்கள் தாக்கியதில் இறந்தாரா? என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் குடியிருப்பு மிகுந்த பகுதியில் உள்ள அரசு மதுபானக்கடையில் தினந்தோறும் இரவு நேரங்களில் குடித்துவிட்டு வீட்டிற்கு வாசலிலேயே குடிபோதை நபர்கள் படுத்து உறங்கி விடுவதாகவும் இது போல ஒரு சிலர் இறந்து விடுவது வாடிக்கையாக நிகழ்ந்து வருவதால் அரசு மதுபானக்கடையை அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.