விபத்து 
செய்திகள்

தக்கலை அருகே டெம்போவில் இருந்து விழுந்து தொழிலாளி பலி

தக்கலை அருகே டெம்போவில் இருந்து தவறி கீழே விழுந்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

தக்கலை:

திருவாரூர் மாவட்டம் நன்நிலம் பகுதியை சேர்ந்தவர் வீரமணி (வயது 38). இவரது நண்பர் குடவாசலை சேர்ந்த ராஜேஷ் (27).

கட்டிட தொழிலாளிகளான இவர்கள் 2 பேரும் தக்கலையில் தங்கியிருந்து வேலை செய்து வந்தனர். மார்த்தாண்டத்தில் கட்டிட பணியை முடித்துவிட்டு இவர்கள் 2 பேரும் டெம்போவில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.

முளகுமூடு பகுதியில் டெம்போ வந்தபோது அதில் இருந்து தவறி கீழே விழுந்த ராஜேஷ் படுகாயம் அடைந்தார். ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.

இதுபற்றி தக்கலை போலீசார் வழக்குபதிவு செய்து டெம்போ டிரைவர் அய்யப்பனை கைது செய்தனர். 

SCROLL FOR NEXT