விபத்து 
செய்திகள்

தருமபுரி அருகே விபத்தில் கூலித்தொழிலாளி பலி

தருமபுரி அருகே இருசக்கர வாகனம் மீது மினிலாரி நேருக்குநேர் மோதிய விபத்தில் கூலித்தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

பாலக்கோடு:

தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் இருந்து பெரியம்பட்டி செல்லும் பிரதான நெடுஞ்சாலையில் பேளாரஹள்ளி பகுதியில் இருசக்கர வாகனத்தின் மீது மினிலாரி நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற பேளாரஹள்ளி கிராமத்தை சேர்ந்த காவேரி மகன் கூலித்தொழிலாளியான ராஜ் (வயது 62) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் அவருடன் சென்ற நண்பர் கொட்டாப்பள்ளம் கிராமத்தை சேர்ந்த ராஜா (வயது 60) என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர் தருமபுரி அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து குறித்து பாலக்கோடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT