மரணம் 
செய்திகள்

பென்னாகரம் அருகே கூலித் தொழிலாளி மர்ம மரணம்

பென்னாகரம் அருகே வீட்டில் கூலித் தொழிலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன.

மாலை மலர்

தர்மபுரி:

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்துள்ள பாப்பாரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் காவேரி (வயது52), கூலித்தொழிலாளி. இவர் மீது அடிதடியில் ஈடுபட்டதாக போலீஸ் நிலையத்தில் வழக்குபதிவு இருந்ததால் தலைமறைவாக அவரது அண்ணன் வீடான கடைமடைப் பகுதியில் தங்கியிருந்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கில் தொங்கிய நிலையில் காவேரி பிணமாக கிடந்தார். இதனை நேற்று காலை அவரது அண்ணன் வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தார். 

இது குறித்து தகவல் அறிந்த பாலக்கோடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தூக்கில் பிணமாக கிடந்த காவேரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.