கோப்பு படம். 
செய்திகள்

அவனியாபுரம் அருகே எந்திரத்தில் தலையை வைத்து தொழிலாளி தற்கொலை

அவனியாபுரம் அருகே சம்பளம் கிடைக்காததால் வேதனை அடைந்த தொழிலாளி எந்திரத்தில் தலையை வைத்து தற்கொலை செய்து கொண்டார்.

மாலை மலர்

மதுரை:

மதுரை அவனியாபுரத்தை அடுத்த சிந்தாமணி இ.பி.காலனியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 33). இவர் ராஜமான்நகரில் உள்ள அலுமினிய பட்டறையில் வேலை பார்த்து வந்தார். 

இந்தநிலையில் நேற்று பணி முடித்து வந்த பாலமுருகன் முதலாளியிடம் சம்பளம் கேட்டுள்ளார். முதலாளி சம்பளம் தராததால் வேதனை அடைந்த பாலமுருகன் அலுமினிய பட்டறை எந்திரத்தில் தலையை வைத்தார். இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். 

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பாலமுருகனின் உடலை கைப்பற்றி மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

இதுகுறித்து அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.