கைது 
செய்திகள்

விருதுநகரில் தொழிலாளி மீது பீர்பாட்டில் தாக்குதல்- 2 வாலிபர்கள் கைது

விருதுநகரில் வாக்குவாதத்தில் தொழிலாளி மீது பீர்பாட்டில் தாக்குதல் நடத்திய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர்:

விருதுநகர் அருகே உள்ள சேர்வைக்காரன் பட்டியை சேர்ந்தவர் சோலைராஜ் (வயது 48). தொழிலாளி. இவர் மத்திய சேனை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த சிவன் (21), கணேசன் (20), கருப்பசாமி ஆகியோர் வந்தனர். அவர்கள் சோலைராஜிடம் உன் மகனை கண்டித்து வை என எச்சரித்தனர்.

இது தொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த 3 பேரும் பீர்பாட்டிலால் சோலை ராஜை தாக்கினர். இதில் அவர் காயம் அடைந்தார்.

இதுகுறித்து ஆமத்தூர் போலீசில் சோலைராஜ் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சிவன், கணேசன் ஆகியோரை கைது செய்தனர்.

SCROLL FOR NEXT