ஜிதேந்திரா குமார்ஷா 
செய்திகள்

சமூக வலைதளங்களில் சிறுமிகள் ஆபாச படம் பதிவேற்றம் செய்த தொழிலாளி கைது

திருப்பூர் அருகே சமூக வலைதளங்களில் சிறுமிகள் ஆபாச படம் பதிவேற்றம் செய்த பனியன் தொழிலாளியை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மாலை மலர்

திருப்பூர்:

ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் ஜிதேந்திரா குமார்ஷா(வயது 28).

இவர் திருப்பூர் அடுத்த ஊத்துக்குளி அருகே உள்ள பூசாரி பாளையத்தில் தங்கி அங்குள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

இவர் கடந்த சில மாதங்களாக தனது சமூக வலைதள பக்கத்தில் சிறுமிகள் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்து வந்துள்ளார்.

இதனை சென்னையில் உள்ள சைபர் கிரைம் போலீசார் கண்காணித்து வந்தனர். பின்னர் அவர்கள் இதுகுறித்து திருப்பூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு தகவல் அனுப்பினர்.

இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷா மிட்டல் உத்தரவின் பேரில் ஊத்துக்குளி போலீசார் ஜிதேந்திரா குமார்ஷா தங்கி இருந்த அறைக்கு சென்று அவரை கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர் திருப்பூர் ஜே.எம்.எண்.3 கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவினாசி கிளை சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவம் திருப்பூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.